RECENT NEWS

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் அறிவிப்பு
அக்.13-ஆம் தேதி பொறியியல் 3 வது கட்ட கவுன்சிலிங் ஆரம்பம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி..

அக்.13-ஆம் தேதி பொறியியல் 3 வது கட்ட கவுன்சிலிங் ஆரம்பம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி..

Oct 11, 2022

2364

பொறியியல் மாணவர்களுக்கான 3 வது கட்ட கவுன்சிலிங் 13 ம் தேதி துவங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்தாண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.பொறியியல் படிப்போடு சேர்த்து இந்தாண்டு பி.ஆர்க் படிப்புக்கும் முதன்முறையாக கவுன்சிலிங் நடத்தப்படுவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.அரசு கலைக் கல்லூரிகளில் புதிதாக 4000 ஆசிரியர்கள் தேர்வு மூலம் பணியமர்த்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அப்போது அரசு கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி அனுபவ அடிப்படையில் நேர்முகத் தேர்வின் போது 50 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 20 முதல் ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 20 முதல் ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

Jun 08, 2022

2590

தமிழகத்தில் பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு ஜூன் 20 முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனறு மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கும் என்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்தார்.தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகும் என்றும் அவர் கூறினார். கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ஜீன் 27 முதல் ஜீலை 15 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

சியுஇடி பொது நுழைவுத்தேர்வு குறித்து விளக்கமளித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய அமைச்சர் கடிதம்

சியுஇடி பொது நுழைவுத்தேர்வு குறித்து விளக்கமளித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய அமைச்சர் கடிதம்

Apr 25, 2022

3143

CUET பொது நுழைவுத் தேர்வை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் அந்த தேர்வு குறித்து விளக்கமளித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், CUET பொது நுழைவுத் தேர்வு மாநிலங்களின் உரிமைகளில் தலையிடவில்லை என்றும், கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால் அதை மேம்படுத்தும் பணி மத்திய அரசுக்கும் உண்டு என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களில் சேர தனியாக பயிற்சி எடுப்பதையும், கூடுதல் செலவையும் CUET தடுத்திருப்பதாகவும், இந்த தேர்வுக்கு இதுவரை மூன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே UG படிப்புகளுக்கான CUET தேர்வு நடத்தப்படுவதாகவும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு ;  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு ; உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

Jan 10, 2022

8983

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும்  கால வரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி மாதம் 20-ந் தேதிக்கு பின்னர் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்களின் கோரிக்கையை ஏற்றும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக கூறினார்.மீண்டும் தேர்வு நடத்தப்படும் தேதி ஒரு வாரத்திற்கு முன்பாக மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், அரசின் உத்தரவை மீறி தேர்வு நடத்தும் கல்லூரிகள் மூடப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்தார். 

அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவருக்கு மட்டுமே பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் இடஒதுக்கீடு - அமைச்சர் பொன்முடி

அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவருக்கு மட்டுமே பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் இடஒதுக்கீடு - அமைச்சர் பொன்முடி

Sep 16, 2021

3308

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்திருப்பவர்கள் மட்டுமே 7.5 சதவீத சிறப்பு உள் இடஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில், அரசு பள்ளி மாணவர்கள் யாரும் விடுபடவில்லை என்றும், விடுப்பட்ட மாணவர்கள் முறையிட்டால் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படும் எனவும் கூறினார். 

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 26ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 26ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

Jul 20, 2021

2123

கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 26 முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னைத் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில் படிப்பு தொடரும் -உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில் படிப்பு தொடரும் -உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

Jul 01, 2021

5789

சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில் படிப்பை தொடர்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகஸ்ட் 1ந் தேதி முதல் அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கும் என்றார்.மாணவர் சேர்க்கையை அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரி நடத்த அறிவுறுத்தியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேர்வு கட்டணம் செலுத்தாத 23 தனியார் பொறியியல் கல்லூரிகளின் இணைப்பு ரத்து செய்யப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேர்வு கட்டணம் செலுத்தாத 23 தனியார் பொறியியல் கல்லூரிகளின் இணைப்பு ரத்து செய்யப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

May 20, 2021

3401

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேர்வு கட்டணம் செலுத்தாத 23 தனியார் பொறியியல் கல்லூரிகளின் இணைப்பு ரத்து செய்யப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற திங்கட்கிழமைக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் பணத்தை கட்டவில்லையென்றால், இணைப்பு ரத்து செய்யப்படுவதோடு, அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படாது எனவும் தெரிவித்தார்.மேலும், அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தர பணிக்காக பணம் கொடுப்பதாக புகார்கள் வருவதாகவும், அவ்வாறு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.கடந்த காலங்களில் கவுரவ விரிவுரையாளர்களின் நிரந்தர நியமனத்திற்கு குழு அமைக்கப்பட்டிருந்ததாகவும், குழுவில் முறைகேடு நடப்பதாக புகார்கள் வந்ததின் அடிப்படையில், அது ரத்து செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

BIG STORIES

காதலன் மீது கொலை வெறி.. செல்போன் நிறுவன பெண் ஊழியர் செய்த கொடூர செயல்..! 23 வயது எப்படி 16 ஆனது ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News